ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கு நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கோரல்.
இவ் விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவையிலுள்ள பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர் பயிற்சியை இதுவரை பெற்றுக்கொள்ளாத ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் ஆகியோர் இப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை கல்வியமைச்சின் ஆசிரியர் கலாசாலை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். கோப்பாய், மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை, மகரகம, பேராதனை, பலப்பிட்டி, உணவட்டுட உள்ளிட்ட ஆசிரியர் கலாசாலைகளிலும் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சிகளுக்கு ஆங்கிலம், தமிழ், சிங்களம் உட்பட பல்வேறு பாடத்துறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களை ஜூலை 05 ஆம் திகதி வர்த்தமானியில் பார்வையிட முடியும்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கு நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கோரல்.
Reviewed by Admin
on
July 24, 2013
Rating:

No comments:
Post a Comment