அண்மைய செய்திகள்

recent
-

சமயபாடங்களுக்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவியினை உருவாக்க கோரி மனு கையளிப்பு

வடமாகாணத்தின் 12 கல்வி வலயங்களிற்கும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்களிற்கான சமய பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவியணியினை உருவாக்குமாறு கோரி, வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக வலிகாம வலய ஆசிரிய ஆலோசகர் என்.பி ஸ்ரீந்திரன் அறிவித்துள்ளார்.


வடமாகாணத்தில் 12 கல்வி வலய சமய பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் கையொப்பமிட்டு கடந்த 5ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ள அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தென்னிலங்கை மத்திய மாகாணம் ஆகிய பிரதேசங்களிலுள்ள கல்வி வலயங்களில் பௌத்த சமயத்திற்கு பௌத்த சமய பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவி இருப்பது போல வடமாகாணத்தின் 12 கல்வி வலயங்களிற்கும் மேற்படி பதவியணியினை உருவாக்குமாறும் அதற்கான சட்ட அதி காரம் மாகாணக்கல்வி அமைச்சுக்கு உண்டு எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய மாணவர்களையும் இந்து சமயம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் பெருந்தொகையாகக் கொண் டுள்ள வடமாகாணப் பாடசாலைகளிற்கு இந்து சமயப் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் பதவி இந்து சமயப் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் பதவி அவசியம் எனவும் இது பாட ரீதியான வேலைத்திட்டங்களை வலயங்கள் முன்னெடுக்க பேருதவியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறே கிறிஸ்தவ இஸ்லாம் பாடங்களைக் கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் வட மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதால் இப்பதவியணியினை உருவாக்குவது நன்மையானதாகவும் அமையும் எனவும் குறிப்பிட்டப் பட்டுள்ளது.

மாகாணகல்வி அமைச்சுக்கள் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்படி பதவி யணியினை உருவாக்கலாம் என்பதற்கு மத்திய மாகாணக் கல்வி அமைச்சு முன்னுதாரணமாகவுள்ளது.

அம்மாகாணத்தில் இந்து சமய உதவிக்கல்விப்பணிப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதெனவும், அதன் நிய மனக்கடித்தப் பிரதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை கடிதத்ததுடன் சான்றாக இணைக்கப்பட்டுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட செயலாளர் இவ்விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடிச் சாதகமான முடிவினைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


சமயபாடங்களுக்கு உதவிக்கல்விப் பணிப்பாளர் பதவியினை உருவாக்க கோரி மனு கையளிப்பு Reviewed by Admin on July 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.