அண்மைய செய்திகள்

recent
-

மதுபானத்தில் தூக்கமருந்து கலந்து மோசடி.

சாராயம் மற்றும் கள்ளு என்பவற்றுக்கு தூக்க மாத்திரையைக் கலக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
அவிசாவளை, கொஸ்கமவில் தனி நபரொருவரிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகளும் இச்செயற்பாட்டுக்குப் பயன்படுத்தப்படவிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


தனிநபரொருவருக்கு இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகளை வழங்கிய மருந்து பொருள் மொத்த விநியோகஸ்தரின் அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தேசிய மருந்து பொருள் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, தேசிய மருந்து பொருள் அதிகார சபையும், ஹோமாகம பொலிஸும் கடந்த 19 ஆம் திகதி இரவு தனி நபரொரு வரிடமிருந்து இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகின. இவ்விசாரணைகளில் இத்தூக்க மாத்திரைகளை மருந்து பொருள் மொத்த விநியோகஸ்தர் ஒருவரே மருந்தகம் இல்லாத தனிநபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் காரணத்தினால் குறித்த நபரின் மருந்துப் பொருள் மொத்த விநியோக அனுமதிப்பதிவை உடனடியாக இரத்துச் செய்யுமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தேசிய மருந்து பொருள் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேவேளை, இத்தூக்க மாத்திரைகள் மதுபானத்துடன் கலக்கப்படுவதும் இவ்விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இம்மாத்திரைகளை தம்மிடம் வைத்திருந்த நபரின் உறவினர் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார். அவர் ஒவ்வொரு 2500 லீற்றர் மதுபானத்திற்கும் 1000 தூக்க மாத்திரைகள் கலக்கப்பட்டு போதைத் தன்மை அதிகரிக்கப்படுவதாகவும் இவ்விசாரணைகளில் தெரிய வந்திருக் கின்றது.




மதுபானத்தில் தூக்கமருந்து கலந்து மோசடி. Reviewed by Admin on July 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.