யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவிகள் தங்கியிருந்த விடுதி மீது தாக்குதல்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று சிங்கள மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
மது போதையில் குறித்த வீட்டுக்கு சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன், வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர்.
கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள்.
இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவிகளால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிர்வாகத்தினால் அங்கு தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் பாதுகாப்பாக யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவிகள் தங்கியிருந்த விடுதி மீது தாக்குதல்
Reviewed by Admin
on
July 22, 2013
Rating:

No comments:
Post a Comment