அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! யாழ்பாணத்தில் சம்பவம்

யாழில் ஊடகவியலாளர் ஓருவர்மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


 சுயாதீன ஊடகவியலாளரான சி.மயூதரன் (வயது26) என்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் சி.சிவதாஸ் (வயது28) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி கலாசாலை வீதி பகுதியில் குறித்த ஊடகவியலாளர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளை வானில் வந்த இனம்தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 இதனையடுத்து இவர்கள் இருவரும் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், வாகனத்தையும் அதில் வந்தவர்களையும் மடக்கிப் பிடித்து வாகனத்தின் சாவியையும் எடுத்துக் கொண்டனர்.

 அதற்குள் அந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளனர்.


ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! யாழ்பாணத்தில் சம்பவம் Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.