கார்டிஃப் நகர மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு
யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அவருக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
கார்டிஃப் நகர மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய உத்தரவு
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:

No comments:
Post a Comment