அண்மைய செய்திகள்

recent
-

கடனாளிகளைத் தேடி வலைவீசும் வங்கிகளின் அதிகாரிகள்.

கடன் தொல்லைகளால் தலைமறைவாகும் வங்கிக் கடனாளிகளைத் தேடி வங்கி அலுவலர்கள் கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய செய்கைகளைக் காட்டி அதிகளவான வங்கிக்கடன்களைத் தனியார் வங்கிகளிலும் அரச வங்கிகளிலும் பெற்றுக் கொண்டு அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில் கடன்பட்டோர் தலைமறைவாகிவருகின்றனர். இவர்களைத் தேடி வங்கி உத்தியோகத்தர்கள் வீடுவிடாக செல்கின்றனர்.

குறிப்பாக கடந்த 2011ஆம் ஆண்டு இப் பிரதேச விவசாயிகள் வங்கிகளில் சில கமக்கார அமைப்புக்களின் துணையுடன் தவறான தகவல்களை வழங்கி அதிக வங்கிக் கடன்களைப் பெற்று அவற்றைத் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்றுவரை குறித்த கடன்களை மீளச் செலுத்தாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் கடன்களை வழங்கிய தனியார் வங்கிகள் மற்றும் அரச வங்கிகள் பல தடவைகள் கடனாளிகளுக்கு அறிவித்தல்களை வழங்கியபோதும் அவர்கள் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தாத நிலையில் வங்கி உத்தியோகத்தர்கள் தினமும் கடனாளிகளைத் தேடி வீடுவீடாகச்செல்கின்றனர்.

இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கடனாளிகளைத் தேடி வலைவீசும் வங்கிகளின் அதிகாரிகள். Reviewed by Admin on July 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.