விவசாய கடனை செலுத்தாத வன்னி மாவட்ட விவசாயிகளுக்கு எதிராக வங்கிகள் வழக்குத்தாக்கல்
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த காலங்களில் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கிகளில் விவசாய கடனை பெற்றுள்ளதோடு,வங்கிகளில் நகைகளை ஈடுவைத்து பணத்தை பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
எனினும் எதிர்பாராத விதத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உற்பட இயற்கை அனர்த்தங்களினால் வன்னி மாவட்ட விவசாயிகளின் பல ஏக்கர் விவசாய செய்கைகள் அழிவடைந்தது.
இதனால் குறித்த விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு மன உழைச்சலுக்கும் உள்ளாகினர்.குறித்த இயற்கை அனர்த்தம் 2011 மற்றும் 2012 ஆகிய காலங்கலிலேயே அதிகம் நிகழ்ந்தது.
இதனால் இந்த விவசாயிகள் குறித்த கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.இது தொடர்பாக 20-09-2012 அன்று திகதியிடப்படப்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த கடனை செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எதிராக குறித்த வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.இதனால் குறித்த விவசாயிகள் தற்போது பாரிய மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் தோற்றிவிக்கப்பட்டுள்து.
எனவே தற்போது உணவுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் குறித்த விவசாயிகளின் வங்கி கடன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாய கடனை செலுத்தாத வன்னி மாவட்ட விவசாயிகளுக்கு எதிராக வங்கிகள் வழக்குத்தாக்கல்
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:

No comments:
Post a Comment