அண்மைய செய்திகள்

recent
-

தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் காணாமற் போனோரின் உறவுகள்

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுப்பப்பட்ட இறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளாத உறவினர்கள் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் அவர்களின் உறவினர்கள் முன்பாக இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு சரணடைந்தவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் இதுவரை எதுவும் தெரியாது.

 அவர்களின் உறவினர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். இவ்வாறு சரணடைந்த சிலர் வவுனியா தமிழ் மகா வித்தி யாலயத்தில் தடுத்து வைக் கப்பட்டிருந்த போது மக்கள் நேரில் கண்டபோதும் அவர்கள் தொடர்பிலும் எதுவும் தெரியாதெனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிரிப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர். சரணடைந்தவர்கள் தொடர் பில் ஜோசப் முகாம், இலங்கை மனித உரிமை ஆணைக் குழு, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு என்பவற்றில் அவர்களின் உறவினர்கள் முறைப் பாடு செய்துள்ளனர்.

 இந்த நிலையில் இவ்வாறு சரணடைந்தவர்களின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சரணடைந்தவர்கள் இறந்தமைக்கான இறப்புச் சான்றிதழை வழங்க முற்பட்டுள்ளனர்.

உறவினர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததும் திரும்பிச் சென்ற அவர்கள், தற்போது விசாரணை என்ற பெயரில் உறவினர்களை அழைத்து அலைக்கழித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் உறவுகளை இழந்து வாடுகின்ற தமக்குப் பெரும் பாதிப்பாக அமைவதாக சரணடைந்து காணாமற் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் காணாமற் போனோரின் உறவுகள் Reviewed by Admin on August 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.