பாண் விற்பனை செய்த இளைஞன் மீது மர்ம நபர்கள் வாள் வெட்டு
வெதுப்பகங்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டி வியாபாரமே இதற்குக் காரணமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குடாநாட்டில் இயங்கிவரும் அநேகமான வெதுப்பகங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டோக்கள் மூலம் நடமாடும் பாண் விற்பனையை ஆரம்பித்துள்ளன.
இந் நடமாடும் சேவையினால் பாவனையாளர்கள் நன்மையடைந்துள்ள போதிலும் இதுவரை காலமும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறுசிறு வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் பாண் விற்பனை நிறுத்தப்படடுள்ளது. ஒரு ஆட்டோ மூலம் நடமாடும் பாண் விற்பனையை ஆரம்பித்த வெதுப்பகங்கள் தற்பொழுது சேவையின் தூரத்தை விஸ்தரித்ததுடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோக்களைப் பயன்படுத்தி போட்டி மனப்பான்மையுடன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் சுதுமலையில் உள்ள ஒரு வெதுப்பகம் ஆட்டோ மூலம் பாண் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்கால் என்னும் இடத்தில் வைத்து ஆட்டோவை வழி மறித்த இனந்தெரியாத நபர்கள் வியாபாரத்தில் ஈடுபட்ட வாலிபரை வாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர். இருகைகளிலும் காயங்களுக்குட்பட்ட இளைஞன் யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாண் விற்பனை செய்த இளைஞன் மீது மர்ம நபர்கள் வாள் வெட்டு
Reviewed by Admin
on
August 20, 2013
Rating:

No comments:
Post a Comment