மன்னாரில் இடம்பெறும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா 2ம் நாள் நிகழ்வுகள்- 2ம் இணைப்பு (படங்கள்)
இரண்டாம் நாள் நிகழ்வின் முதல் அமர்வாக இடம்பெறும் ஆய்வரங்கு 'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்' அரங்கில் இடம்பெறுகின்றது. பேராசிரியர் எஸ். மௌனகுரு தலைமையில் இடம்பெறும் இவ்வாய்வரங்கின் வரவேற்புரையை மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி பு. மணிசேகரன் நிகழ்த்துகின்றார். தொடக்கவுரையை மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். எம். சியான் அவர்கள் வழங்குகின்றார்.
'தனிநாயகம் அடிகளாரின் தனித்துவ ஆழுமை' என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் அவர்களும், 'தனிநாயகம் அடிகளாரின் தமிழ்த்தூதுப் பயணங்களும் அதன் விளைவுகளும்' என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களும், 'தனிநாயகம் அடிகளாரின் இதழியல் பணிகள்' என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்களும், 'தனிநாயகம் அடிகளாரும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளும்' என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக கிறிஸ்தவத்துறை விரிவுரையாளர் அருட்திரு ஏ. ஏ. நவரெட்னம் அடிகளாரும், 'தனிநாயகம் அடிகளாரும் ஒப்பியல் ஆய்வும்' என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் செ. யோகராசா அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். இந்த ஆய்வரங்கின் நன்றியுரையை மடு கல்வி வலய தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் செல்வி ந. வல்லிபுரம் அவர்கள் வழங்குகின்றார்.
இரண்டாம் நாள் அரங்கு இலக்கிய அரங்காக அமைந்துள்ளது. 'கலாநிதி மனோகரக் குருக்கள் அரங்கு' எனப்பெயரிடப்பட்ட இந்த அரங்கானது மன்னார் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் சிவசிறி தர்மகுமாரக் குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். எம். சியான் அவர்களும், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஏ. ஜே. குரூஸ் அவர்களும் கலந்துகொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்டச் செயலகத்தின்; பிரதம கணக்காளர் திரு. க. கமலேஸ்வரன் அவர்களும், நானாட்டான் கோட்டக் கல்வி அதிகாரி திரு. எஸ் டேவிட் அவர்களும், மட்டக்களப்பு ஆசா. யோசவ்வாஸ் வித்தியாலய அதிபர் திரு. சுந்தரம் பாண்டியன் அவர்களும் கலந்துகொள்கின்றனர். கௌரவ விருந்தினர்களாக பேராசிரியர் எஸ். மௌனகுரு அவர்களும், பேராசிரியர் துரை மனோகரன் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
விருந்தினர் கௌரவம், மங்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரையை மன்னார் தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர் திரு. எஸ். அந்தோனிதாசன் அவர்கள் வழங்குகின்றார். இந்நிகழ்வின் ஆசியுரையை மௌலவி எஸ். ஏ. அஸீம் அவர்கள் வழங்குகின்றார். இந்நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழருவி த. சிவகுமரான் தலைமையில், 'பாரதி கண்ட கனவு .... நனவாகி நிலைத்துள்ளது, இல்லை கனவாகிக் கலைந்துள்ளது' என்ற தலை;பில் பட்டி மண்டபம் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதைவிட தமிழ்மாமணி திரு. அகளங்கன் தலைமையில் 'தமிழால் வாழ்வோம்' என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெறுகின்றது. இன்னும் மாணவர்களின் பல்துறை நடன, நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. நன்றியுரையை மன்னார் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு. ந. தங்கராசா அவர்கள் நிகழ்த்துகின்றார்.
\
மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் கலையரங்கு 'கவிஞர் மொத்தம் போல் அரங்கு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மன்னார் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். லோகநாதன் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்குகின்றார். மொனராகலை அரசாங்க அதிபர் திரு. ஏ. பத்திநாதன் அவர்கள் இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் திரு. எஸ். தயானந்தா, நானாட்டான் பிரதேச செயலாளர் திரு. சி. ஏ. சந்திரஐயா அவர்களும், கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக திரு. செ. சி. இராமகிருஸ்ணன் அவர்களும், அருட்திரு. அ.பி. ஜெயசேகரம் அடிகளாரும் (யாழ்ப்பாணம்), அருட்திரு. ஜோசப் மேரி அடிகளாரும் (மட்டக்களப்பு) கலந்துகொள்கின்றனர்.
விருந்தினர் கௌரவம், மங்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரையை மன்னார் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு. சிந்தாத்துரை அவர்கள் நிகழ்த்துகின்றார். இந்த அமர்வின் முக்கிய நிகழ்வாக மன். சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி வழங்கும் 'பொம்மலாட்டம்' என்ற சமூக நாடகம் இடம்பெறுகின்றது. இதைவிட மாணவர்களின் பல்வேறு வகையான நடன நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நன்றியுரையை மன்னார் தமிழ்ச்சங்கத்தின் நிதிச் செயலாளர் ஜனாப் முகமட் சிஹார் அவர்கள் வழங்குகின்றார்.
மன்னாரில் இடம்பெறும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா 2ம் நாள் நிகழ்வுகள்- 2ம் இணைப்பு (படங்கள்)
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:
No comments:
Post a Comment