புதிய நேர அட்டவணையில் நெடுந்தீவு குறிகாட்டுவான் குமுதினி,வடதாரகை படகுச் சேவைகள்.
பயணத்தைமேற்கொள்ள முடியும் எனவும் இச் சேவையில் வடதாரகை-2 படகு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவிலிருந்து காலை 6.30 மணிக்கு வடதாரகை-2, காலை 7.30 மணிக்கு குமுதினியும் குறிகாட்டுவான் செல்லவுள்ளது. அங்கிருந்து காலை 9 மணிக்கு நெடுந்தீவுக்குப் புறப்படும் குமுதினி மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு குறிகாட்டுவான் செல்லவுள்ளது.
இப்படகு அங்கிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு நெடுந்தீவுக்குச் செல்லவுள்ளது.
குமுதினி தினசரி இரண்டு சேவைகளையும் காலை 6.30இற்கு குறிகாட்டுவானுக்குப் புறப்படும் வடதாரகை-2 பிற்பகல் 12.30 மணிக்கு நெடுந்தீவுக்குச் செல்லவுள்ளதுடன் தினசரி ஒரு தடவை சேவைகளை மேற்கொள்ளும்.
வியாழக்கிழமைகளில் குமுதினி, வடதாரகை-2 படகுகளின் சேவைகள் இடம்பெறமாட்டாது. அன்றைய தினம் தனியார் படகுகள் நெடுந்தீவில் இருந்து காலை 6.30 மணிக்கும் பி.ப 2.30 மணிக்கும் குறிகாட்டுவானுக்கும் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு காலை 9 மணிக்கும் பி.ப. 4.30 மணிக்கும் சேவைகளை வழங்கும் இன்று திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகின்றது.
புதிய நேர அட்டவணையில் நெடுந்தீவு குறிகாட்டுவான் குமுதினி,வடதாரகை படகுச் சேவைகள்.
Reviewed by Admin
on
August 05, 2013
Rating:

No comments:
Post a Comment