31 பாடசாலைகளின் நேரத்தை நீடிக்குமாறு கோரிக்கை
மூன்றாம் தவணை பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்காக ஒரு பாடநேரத்தை 40 நிமிடத்திலிருந்து ஒன்றரை மணித்தியாலமாக அதிகரிக்குமாறு கல்வியமைச்சு பாடசாலைகளிடம் கேட்டுள்ளதென சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். மாணவர்களால் ஒரு பாடத்தில் நீண்ட நேரமாக கருத்தூன்றி படிக்க முடியாது. எனவே இது மிகவும் கடுமையான பிரச்சினையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
வேறு நிகழ்வுகளுக்காக அரசாங்கம் பாடசாலைகளை மூடுவது இதுதான் முதல் தடவை இல்லை. தேசத்துக்கு மகுடம் மற்றும் வேறு நிகழ்வுகளின் போது அரசாங்கம் இவ்வாறுதான் செய்தது. இவற்றை வேறு இடங்களில் நடத்துவதே பொருத்தமானது. இவ்வாறான நிலைமையில் பொலிஸ் மாற்று வழிகளை கண்டுபிடிக்கவேண்டும். ஏனெனில் பாடசாலைகளை மூடுவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வது கடினமானது என்றும் ஸ்ராலின் கூறியுள்ளார்.
31 பாடசாலைகளின் நேரத்தை நீடிக்குமாறு கோரிக்கை
Reviewed by Admin
on
September 14, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment