எழுதுகோல் ஒரு வாளிலும் பார்க்க வலிமையானது
இலங்கையில் எழுத்த்தறிவு வீதம் மிகவும் உயர்ந்த அளவில் இருப்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்ளும் வேளையில் அவ்வீதத்தை பெறுவதற்க்கு காரண கர்த்த்தாவாக இருப்பவர்களை நாம் நினைக்க தவறுகிறோம். இந்த வகையில் இலவச கல்வி முறையை நமக்கு, இலங்கையர்களுக்கு, அறிமுகபபடுதித்த்திய முன்னைய நாள் கல்வி அமைச்சர் C.W.W கன்னங்கரா அவர்களையும் அதை உரிய முறையில் அமுல்படுத்துகின்ற அதிபர்கள் ஆசிரிய ஆசிரியைகளையும் என்றும் நன்றி உணர்வோடு நினைவு கூர நாம் மிகவும் கடமை பட்டுள்ளோம்.
"எழுத்த்தறிவித்தவன் இறைவனாவான்". ஆரியன் ஒருவன் அறிவு எனும் ஒளியை கொண்டு அறியாமை எனும் இருளை போக்கி ஒரு சிப்பியை போன்று சமுதாயத்திற்க்கு நல்ல பிரஜைகளை உருவாக்குகிறான். இந்த வகையில் ஒரு ஆசிரியனுக்கும் ஒரு ஊடகவியலாளனுக்கும் இடையில் ஒரு வித ஒருமைப்பாடு தொழில் ரீதியாக காணப்படுகிறது. ஒரு ஆசிரியன் ஒரு வெண் கட்டித்துண்டை கையில் ஏந்தி அறியாமையை நீக்குகிறான்.
ஒரு ஊடகவியலாழன் எழுது கோலை கையில் ஏந்தி தெரியாத விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த்துகிறான். உண்மைகளை வெளிச்சத்த்துக்கு கொண்டு வருகிறான். உண்மை எது? பொய் எது? என்பதை மக்கள் அறிய வைக்கிறான். இன்று ஊடகவியலாளனும் ஆசிரிய ஆசிரியைகளும் பொதுவான ஒரு பிரச்சனையை இந்நாட்டில் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் அச்சுறுத்த்தப்படுகின்றார்கள். கடத்தப்படுகிறார்கள் .
இந்த வருடம் நடுப்பகுதியில், ஜுலை மாதத்த்தில் இலங்கையின் பிரபல பாடசாலையின் ஆசிரியை அரசியல்வாதி ஒருவர் வகுப்பறையில் வைத்து முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்க்க வைத்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதிபர்கள் அவர்களுடைய மாணவர்களாலேயே கொல்லப்படுகிறார்கள் . இதை போன்று ஒரு சம்பவம் இவ்வருடம் முற்பகுதியில் மாசி மாதத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்க்கத்தய வானொலி ஒன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களில் ஒருவரின் பெற்றோர்களின் இருப்பிடத்திற்க்கு , இலைங்கையில், விஜயம் செய்த அரசியல் பின் புலம் கொண்ட கும்பல் ஒன்று அவரின் தந்தையை, ஓய்வு பெற்ற அதிபரும் மூத்த பிரஜையும் ஆவார், தகாத வார்த்த்த்தைகளால் திட்டி அவரின் தாயாரை கால்களால் தாக்கி பணத்தை மிரட்டி பெற்று சென்றுள்ளனர் .
நாட்டில் நிலவும் சீர்கேட்டை நிவர்த்த்தி செய்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட சமயக்கல்வியை போதித்து அதை ஒரு காட்டாயா பாடமாக்க வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் பற்றிய அறிவையும் எல்லோருக்கும் புகட்டுதல் காலத்த்தின் தேவையாகும். "ஒரு எழுது கோல் வாளிலும் வலிமையானது."
எழுதுகோல் ஒரு வாளிலும் பார்க்க வலிமையானது
Reviewed by NEWMANNAR
on
September 13, 2013
Rating:

No comments:
Post a Comment