குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய மருந்துக் கொள்கை தயாரிக்கப்படுகிறது: மைத்திரிபால சிறிசேன
நாட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளினதும் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு தேசிய மருந்துக் கொள்கை ஒன்றை தயாரித்துவருகின்றோம். விரைவில் அதனை நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றோம் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது,
நாட்டில் தேசிய மருந்துக் கொள்கை ஒன்றை தயாரிக்கும் நோக்கில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தோம். தேசிய கொள்கை தொடர்பான சட்டமூலத்தையும் தயாரித்தோம்.
ஆனால் அதனை சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பியதும் அது காணாமல் போய்விட்டது.
அந்த ஆவணத்துக்கு பொறுப்பாக இருந்த அதிகாரி இன்று ஒரு நிறுவனம் ஒன்றின் ஆலோசகராக இருக்கின்றார். அந்த வகையில் தற்போது இரண்டாவது கொள்கையை தயாரித்துவருகின்றோம். விரைவில் இது குறித்து இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
எனவே விரைவில் மருந்துகள் குறித்த தேசிய கொள்கையை தயாரிக்க முடியும் என்று நம்புகின்றோம்.
இதனை மிகவும் ஆர்வமாக முன்னெடுக்கின்றோம். காரணம் நாட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளினதும் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டே தேசிய மருந்துக் கொள்கையை தயாரித்துவருகின்றோம்.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய மருந்துக் கொள்கை தயாரிக்கப்படுகிறது: மைத்திரிபால சிறிசேன
Reviewed by Admin
on
September 17, 2013
Rating:
Reviewed by Admin
on
September 17, 2013
Rating:


No comments:
Post a Comment