மன்னார் மாணவர்கள் யோர்தான் பயணம்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் இம்மாதம் 23ம் திகதி யோர்தான் செல்கின்றனர். ஆசிய கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட போட்டி யோர்தானில் இம்மாதம் 25ம் திகதி முதல் அடுத்த மாதம் 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் இலங்கை தேசிய அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த ஜே யோண்சன் இ எஸ் சஜிவன் இ எஸ் கிசோர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாடசாலையில் இருந்து 3 மாணவர்கள் தேசிய அணியில் ஆடுவது இதுவே முதற் தடவையாகும்.
இலங்கை தாய் நாட்டிற்கு இவர்கள் பெருமை சேர்க்கவும் இவர்களை வாழ்த்துவதோடு இவர்களை நெறிப்படுத்தும் கல்லூரி அதிபர் அருட் சகோ அகஸ்ரின் அவர்களையும் இவர்களை இத்துறையில் உருவாக்கிய பயிற்றுவிப்பாளர் திரு ஞானராஜ் அவர்களையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.
மன்னார் மாணவர்கள் யோர்தான் பயணம்
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment