அண்மைய செய்திகள்

recent
-

நெடுந்தீவுப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு: கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

நெடுந்­தீவில் நீண்ட நாட்­களின் பின் மீண்டும் திருட்டுச் சம்­ப­வங்கள் அதி­க­ளவில் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக பொது மக்கள் தெரி­விக்­கின்­றனர். அண்மைக் கால­மாக இப்­ப­கு­தி­களில் சைக்கிள் திருட்­டுக்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் சமீ­பத்தில் நெடுந்­தீவு பல.நோ.கூ. சங்கப் பணி­மனை முன்­பாக வீதி­யோ­ரத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த இரண்டு துவிச்­சக்­கர வண்­டிகள் காணாமல் போய்­விட்­ட­தா­கவும் பொது மக்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

 இதேபோல் நெடுந்­தீவு மேற்குப் பகு­த யில் பல.நோ.கூ. சங்­கத்தின் முத­லா­வது கிளையில் கூரையைப் பிரித்­துக்­கொண்டு உள்ளே இறங்­கிய திரு­டர்கள் சுமார் ரூபா பத்­தா­யிரம் ரூபாவிற்கு அதி­க­மான பெறு­ம­தி­யான வாய்ந்த பொருட்­களை எடுத்துச் சென்­று­விட்­ட­தா­கவும் மேற்­கி­லுள்ள உப­த­பா­ல­க த்தின் கூரை­யைப்­பி­ரித்துக் கொண்டு உள்­ளி ­றங்­கிய திரு­டர்கள் அங்­கி­ருந்த இரும்புப் பாது­காப்புப் பெட்­டியைத் திறக்­க­மு­டி­யாத நிலையில் மேசை­யி­லி­ருந்து சிறி­த­ளவு பண த்தை எடுத்துச் சென்­றுள்­ள­தா­கவும் தெரி­கின்­றது. 

பல.நோ.கூ. சங்­கத்தில் இடம்­பெற்ற திருட்டை அடுத்து அந்தக் கிளையை சங்கம் மூடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரு கின்றனர்.

நெடுந்தீவுப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு: கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை Reviewed by Admin on September 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.