மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுப்பிரிவினர்க்கான உதைபந்தாட்ட போட்டி 2013 படங்கள்
மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுப்பிரிவினர்க்கான உதைபந்தாட்ட போட்டியானது இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தினால் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் 15 இ 16 ம் திகதிகளில் ( 15-16 ஃ 09 ஃ 2013) மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது.
15ம் திகதி முதலாம் சுற்று லீக் முறையிலும் இ 16ம் திகதி 2ம் சுற்றும் நடைபெற்றது. 16ம் திகதி மாலை 4.00 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அணியும் பள்ளிமுனை புனித லூசியா ம வி அணியும் மோதின.
ஆரம்பம் முதல் இறுதிவரை இரு அணிகளும் மிகவும் சிறப்பாக ஆடின. இரு அணியின் கோல் காப்பாளர்களுக்கும் பந்துகள் மாறி மாறி சென்றன. மிகவும் விறுவிறுப்பான இவ்வாட்டத்தில் எவ்வித கோல்களும் போடப்படாததால் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
இறுதியில் பெனால்டி முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் பள்ளிமுனை புனித லூசியா ம வி அணியினர் வெற்றி பெற்று மாவட்ட சம்பியனாகியது. இவ்வணி அடுத்த மாதம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் மன்னார் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது
இவ்வணியானது தேசிய மட்ட போட்டியில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்.
மஞ்சள் நிற சிருடையுடன் லூசியா ம வி அணியும் வெள்ளை நிற சீருடையுடன் சவேரியார் கல்லூரி அணியும் காணப்படுகின்றனர்
மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுப்பிரிவினர்க்கான உதைபந்தாட்ட போட்டி 2013 படங்கள்
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:

No comments:
Post a Comment