அண்மைய செய்திகள்

recent
-

எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்

நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காப்பகங்களில் சிக்கியுள்ள தமது பிள்ளைகளை தம்மிடம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

நோர்வேயின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய கன்சர் வேட்டிவ் கட்சியின் தலைவியும் எதிர்க்கட்சித் தலையுமாக இருந்த IRON ERNA SOLBERG எட்டு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நோர்வேயின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.

இந்நிலையிலேயே புதிதாக தெரிவாகியுள்ள நோர்வே நாட்டு பிரதமரிடம் மேற்படி நோர்வேயில் வதியும் வெளிநாட்டு வதிவாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து குடிபெயர்ந்து நோர்வேயில் தஞ்சமடைந்துள்ள இலங்கை, இந்தியா, கானா, எத்தியோப்பியா, ரஷ்யா, போலந்து, கொங்கோ, லத்வியா, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களிடம் சிக்குண்டுள்ளன.

தமது குழந்தைகளை மீட்டுக்கொள்வதற்காக நோர்வேயின் முன்னைய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுவந்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்கள் அனைத்தும் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கின்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ஓர் தாயார் என்பதால் கருணையும் மனிதாபிமானமும் கொண்டு தமது பிள்ளைகளை மீட்டுத் தருவதற்கு வழிவகை செய்யுமாறு வேண்டுகின்றனர்.

நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் நோர்வேயில் வதியும் வெளிநாட்டுப் பெற்றோர் தமது பிள்ளைகளை வருடக் கணக்கில் பிரிந்து வருவதாகவும் இதனால் தமது பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எட்டு வருடங்களின் பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ள கன்சர் வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பு- நோர்வே சிறுவர் விடயம் தொடர்பில் கடந்த பல வருடங்களாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம் Reviewed by Admin on September 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.