அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வாபஸ் பெறும் நிலை கூட்­ட­மைப்­புக்கு ஏற்­ப­டலாம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நீதி­மன்­றத்தில் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தவோ அல்­லது அதற்கு அர­சாங்கம் ஆத­ரவு வழங்­கு­வதோ சட்­டத்தை மீறும் செய­லாகும் எனத் தெரி­வித்த தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, இவ் விஞ்­ஞா­ப­னத்தை வாபஸ் பெற வேண்­டிய நிலைமை கூட்­ட­மைப்­பிற்கு உரு­வா­கு­மென்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,

வட­மா­காண சபைத் தேர்தல் நடந்து முடிந்­து­விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆட்சி கோலோச்சப் போகின்­றது.
இனி கூட்­ட­மைப்­பினர் முத­லா­வ­தாக காணி, பொலிஸ் அதி­காரங்­களை பெற்றுக் கொள்­வ­தற்­கான மோதலை அர­சாங்­கத்­துடன் ஏற்­ப­டுத்திக் கொள்­வார்கள்.

அதன் பின்னர் கூட்­ட­மைப்பின் விஞ்­ஞா­ப­னத்­திற்கு அமை­வாக தன்­னாட்சி அதி­காரம் கேட்டு போராட்­டத்தை ஆரம்­பிப்­பார்கள். இவ்­விரு விட­யங்களை முதன்­மைப்­ப­டுத்­தியே கூட்­ட­மைப்­பினர் தேர்­தலில் மக்கள் ஆணையை கோரினர். இதற்­க­மைய கூட்­ட­மைப்­பிற்கு 2ஃ3 பெரும்­பான்மை பலம் கிடைத்­துள்­ளது.

ஆனால் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் 157 ஆவது சரத்தை மீறும் விதத்தில் பிரி­வி­னையை ஊக்­கு­வித்து விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்­டுள்­ளனர். இதற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நீதி­மன்­றத்தின் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவேஇ இதற்கு மக்கள் ஆணை கிடைத்­தி­ருக்­கின்­ற­தென்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

இதனால் இவ்­விஞ்­ஞா­ப­னத்தில் உள்ள விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த கூட்­ட­மைப்­பினால் முடி­யாது. அது மட்­டு­மல்­லாது இதனை நடை­மு­றைப்­ப­டுத்த அர­சாங்­கத்­தி­னாலும் ஆத­ரவு வழங்க முடி­யாது. நீதி­மன்­றத்தின் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் விட­யங்களே நடை­மு­றைப்­ப­டுத்­தவோஇ ஆத­ரவு வழங்­கவோ முடி­யாது. அது நாட்டின் சட்­டத்தை மீறும் செய­லாகும்.

எனவே கூட்­ட­மைப்­பினர் தமது விஞ்­ஞா­ப­னத்தை வாபஸ் பெற வேண்­டிய நிலையும் உரு­வா­கலாம்.
அது­மட்­டு­மின்றி வெற்றி பெற்ற வேட்­பா­ளர்கள் உறுப்­பி­னர்­க­ளாக சத்­தியப் பிர­மாணம் செய்­வ­தற்கு சட்­ட­ரீ­தி­யான தடை ஏற்­ப­டலாம்.


தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வாபஸ் பெறும் நிலை கூட்­ட­மைப்­புக்கு ஏற்­ப­டலாம் Reviewed by Admin on September 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.