காணாமற் போனோர் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நவம்பரில் வருகிறது வடக்கு, கிழக்குக்கு
காணாமற் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழு எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகப் பயணம் செய்து தகவல்களைத் திரட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் காணாமற் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
காணாமற் போனவர்கள் தொடர் பான தகவல்களை அடுத்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்த ஆணைக்குழுவின் செயலா ளருக்கு தமிழ் மொழியில் அனுப்பி வைக்கமுடியும். இதன் பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு மாவட் டத்துக்கும் நேரடியாகச் சென்று முறைப்பாடுகளை ஆராய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முறைப்பாடுகளை உரிய காலத்தில் ஆணைக்குழுவுக்கு அனுப்பாதவர்களும் ஆணைக்குழுவினர் விசாரணைக்கு வரும்போது தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமற் போனோர் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நவம்பரில் வருகிறது வடக்கு, கிழக்குக்கு
Reviewed by Admin
on
September 29, 2013
Rating:

No comments:
Post a Comment