குருநாகல் மாவட்டத்தில் ஜும்மாப் பள்ளிவாயலில் உடைக்கப்பட்டு கொள்ளை
குருநாகல் மாவட்டத்தில் மல்லவபிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள மல்லவபிடிய ஜும்மாப் பள்ளிவாயலில் உண்டியல் மற்றும் காரியாலய பாதுகாப்புப் பெட்டி என்பன உடைக்கப்பட்டு சுமார் பத்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் இன்று (13) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது
.
இனந்தெரியாத நபர்களினால் அதிகாலை 02.00 மணியளவில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் இரண்டு காசோலைகளும் களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல் மாவட்டத்தில் ஜும்மாப் பள்ளிவாயலில் உடைக்கப்பட்டு கொள்ளை
Reviewed by Admin
on
September 14, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment