பெரும்போக பயிர்ச்செய்கைக்கு நீரில்லை' மாந்தை கிழக்கு விவசாயிகள் பாதிப்பு
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வவுனிக்குளத்தின் கீழ் 35 ஏக்கரில் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கும் விவசாயிகள் , இம்முறை மழையின்மையால் வரணிக்குளத்திலும் நீர் போதாமையுள்ளதாகவும் இதனால் தற்போது பெரும்போக செய்கை மேற்கொள்ள முடியாது தாம் மழையை நம்பியே இருப்பதாக தெரிவிக்கின்றனர் .
இதேவேளை , கடந்த வருடமும் பெரும்போக செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் , தத்துப்பூச்சியின் தாக்கத்தினால் நட்டம் அடைந்தனர் . எனினும் , இவ் வருடம் நட்டத்தை எதிர்நோக்காது பெரும்போக செய்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்கு நீர்த்தேவை பெரும் சவாலாக இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர் .
பெரும்போக பயிர்ச்செய்கைக்கு நீரில்லை' மாந்தை கிழக்கு விவசாயிகள் பாதிப்பு
Reviewed by Admin
on
September 24, 2013
Rating:

No comments:
Post a Comment