குளிர்பானங்களுக்கு குளிர் ஏற்றல் கட்டணம் அறவிட்டால் சட்ட நடவடிக்கை
குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களுக்கு கட்டணம் அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தின் பிரகாரம் குளிர்பானங்கள் கொள்வனவு செய்யும் வர்த்தகர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து குறைந்தளவிலான விலையில் நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்கின்றமையால் இனிமேல் குளிர் ஏற்றல் கட்டணம் என வர்த்தகர்கள் அதிகமாக பணம் அறவிடக்கூடாது எனத் தெரிவித்தார்.
மேலும், குறித்த அறிவுறுத்தலுக்கு கட்டுப்படாமல் குளிர்பானங்களுக்கு குளிர் ஏற்றும் கட்டணம் அறவிடப்பட்டால் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் கண்டிப்பாகத் தெரிவித்தார்.
குளிர்பானங்களுக்கு குளிர் ஏற்றல் கட்டணம் அறவிட்டால் சட்ட நடவடிக்கை
Reviewed by Admin
on
September 15, 2013
Rating:

No comments:
Post a Comment