அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது தொடர்பாக அதிகாரிகள் கலந்துரையாடல்.

வடபகுதியில் நியமனம் பெற்ற ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பயிற்சிக் கலாசாலைகளில்
இணைத்து பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்த விடயத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்வி அமைச்சின் கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டுள்ளது .

இவ் வருடம் நடுப்பகுதியில் கிளிநொச்சி , முல்லைத்தீவு , மன்னார் , வவுனியா ஆகிய மாவட்டங்களில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன் உடற்கல்வி டிப்ளோமா , ஆங்கில டிப்ளோமா பாடநெறியில் சித்தியடைந்தவர்களில் சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் . இந்த வகையில் சுமார் 900 பேர் ஆசிரியர் பயிற்சிபெற வேண்டிய நிலையில் உள்ளனர் .

தமிழ்மொழி மூலம் பயிற்சியளிக்கப்படுகின்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை நான்கிலும் இந்த வருடம் பயிற்சி பெறுவதற்கு 300 பேர் விண்ணப்பித்துள்ளனர் . இவ் விடயம் தொடர்பாக தமிழ் ஆசிரியர் கலாசாலைகளின் எதிர்காலம் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு பயிற்சியாளர்களைத் தெரிவு செய்யும் முறை தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது .

இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆசிரியர் கலாசாலை அதிபர்களால் தமிழ் ஆசிரியர் கலாசாலைகளின் எதிர்கால நிலை மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு பயிற்சியளித்தல் தொடர்பாக தகவல் பரிமாறப்பட்டுள்ளது .

இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் , ஆசிரியர் கலாசாலைக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிக்கப்பட்ட இறுதித் தினத்தில் மூன்று மாதம் சேவையை பூர்த்தி செய்யாதவர்களை ஆசிரியர் கலாசாலைகளில் இணைத்து கல்விக்கான விடுப்பு வழங்குவதில் நிதிப்பிரமாண நடைமுறைகள் தடையாக இருந்தாலும் இந்த விடயத்தில் கல்வி அமைச்சின் விசேட அனுமதி பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர் .

ஆனால் வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஆசிரியர்களை பயிற்சிக்கு விடுவிப்பதற்கும் அவர்களுக்கு கல்விக்கான விடுப்பு வழங்குவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு அது தொடர்பான ஒப்புதலை வழங்குமிடத்து புதிய ஆசிரியர்களை ஆசிரியர் கலாசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் விடயம் சாத்தியப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர் .


வடக்கில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது தொடர்பாக அதிகாரிகள் கலந்துரையாடல். Reviewed by Admin on September 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.