முஸ்லிம் வேர்ல்ட் சஞ்சிகையின் செய்தி தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்வு
இலங்கை பௌத்தர்கள், முஸ்லிம்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தி வருவதாக மத்திய கிழக்கில் வெளியாகும் முஸ்லிம் வேர்ல்ட் என்ற சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சஞ்சிகையில் வெளியிட்டப்பட்டுள்ள பொய்யான செய்தியை அடிப்படையாக கொண்டு சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையே பேதங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக இதன் போது அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2013 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் வேர்ல்ட் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியொன்றில், இலங்கையின் பௌத்தர்கள் முஸ்லிம் பெண்களுக்கு இடர்களை ஏற்படுத்தி வருவதாகவும் முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ள அமைச்சரவை, கொழும்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை அழைத்து உண்மை நிலைமையை தெளிவுப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
முஸ்லிம் வேர்ல்ட் சஞ்சிகையின் செய்தி தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்வு
Reviewed by Admin
on
September 14, 2013
Rating:

No comments:
Post a Comment