அரச ஊழியர்களுக்கு இலகு தவணைக் கொடுப்பனவில் மடிக்கணனிகள்
அரச ஊழியர்களின் சேவையினை செயல்திறனாக்கும் பொருட்டு அரச ஊழியர்களுக்கு இலகு தவணைக் கொடுப்பனவில் மடிக்கணனிகளை பெற்றுக் கொடுக்க இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிணங்க இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 'எல் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தின் கீழ் சிங்கர் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இச்சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்காக இத்திட்டத்தினூடாக வழங்கப்படும் மடிக் கணனிகளை 12, 18 மற்றும் 24 மாதத் தவணை அடிப்படையில் பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
அரச ஊழியர்களுக்கு இலகு தவணைக் கொடுப்பனவில் மடிக்கணனிகள்
Reviewed by Admin
on
October 21, 2013
Rating:

No comments:
Post a Comment