மன்னார் - புத்தளம் தொடக்கம் காலி வரையான கடல் பகுதியில் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கும் காலநிலை அவதான திணைக்களம்
இலங்கைத் தீவில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தாக்கம் செலுத்தக் கூடியதாக சீரற்ற காலநிலை தொடரும் என்று காலநிலை அவதான திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையும், வங்காள விரிகுடா, அராபிய கடல் பிராந்தியம் ஆகியவற்றின் வளிமண்டலத்திலும் தளம்பல் காணப்படுவதாவும், அது இலங்கைக்கு தாக்கம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுழல் காற்றும், குறைந்த காற்றழுத்தம் மற்றும் குறைந்த காற்றழுத்த மண்டலம் என்பன உருவாகக் கூடும் என்றும் காலநிலை அவதான திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அதிக மழை வீழ்ச்சி காரணமாக மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், அம்பகமுவ, கொத்மலை, மற்றும் விதுலிபுர போன்ற பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் காரணமாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான பல இடங்களில் மூடுபனி நிலவுவதால் வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறும், பொலிஸாரின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுமாறும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் - புத்தளம் தொடக்கம் காலி வரையான கடல் பகுதியில் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கும் அதேவேளை 80 கிலோமீற்றல் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக மழை காரணமாக மலையகம், மற்றும் ஏனைய நீரேந்துப் பிரதேசங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னார் - புத்தளம் தொடக்கம் காலி வரையான கடல் பகுதியில் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கும் காலநிலை அவதான திணைக்களம்
Reviewed by Admin
on
October 21, 2013
Rating:

No comments:
Post a Comment