வட மாகாண சபை தவிசாளராக சிவஞானம் தெரிவு
வட மாகாண சபையின் தவிசாளராக கந்தையா சிவஞானம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மாகாண சபையின் கன்னியமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது, சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
 இதற்காக கந்தையா சிவஞானத்தின் பெயரினை மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா முன்மொழிய மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழிமொழிந்தார். இதனையடுத்து கந்தையா சிவஞானம வட மாகாண சபையின் தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். 
 இதேபோன்று சபையின் பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதற்காக அன்ரனி ஜெகநாதனின் பெயரினை மாகாண சுகாதர அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் முன்மொழிய மாகாண கடற்தொழில்  அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் வழிமொழிந்தார். இதனையடுத்து அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 
வட மாகாண சபை தவிசாளராக சிவஞானம் தெரிவு
 Reviewed by Admin
        on 
        
October 25, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 25, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
October 25, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 25, 2013
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment