மன்னார் மாவட்டத்தில் 255 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு.- படங்கள்
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 255 பட்தாரி பயிலுனர்களுக்கு இவ்வாறு நிறந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது வர்த்தக,வாணிபத்துரை அமைச்சர் றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டு குறித்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. தேசப்பிரிய,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.பரமதாஸ்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,பிரதேசச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் 255 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு.- படங்கள்
Reviewed by Admin
on
October 15, 2013
Rating:
No comments:
Post a Comment