அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 22 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று திங்கட்கிழமை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

 5 படகுகளில் வருகை தந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த 22 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்;துள்ளனர்.

 தற்போது குறித்த மீனவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ள்னர். 5 படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது..
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 22 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது. Reviewed by Admin on October 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.