ஜனாதிபதி- இரா.சம்பந்தன் சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கும்
இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
வடமாகாண சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றியீட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் இடம்பெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது வடமாகாண அமைச்சரவை பதவியேற்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படுவதுடன் மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்கள் குறித்தும் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழே இருக்கும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் இந்த தீர்ப்பு தொடர்பில் தான் ஆராய்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போதே மாகாண சபைக்கான காணி அதிகாரம் குறித்தும் சம்பந்தன் எம்.பி எடுத்துரைப்பார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி- இரா.சம்பந்தன் சந்திப்பு
Reviewed by Admin
on
October 04, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment