மக்கள் குரலாக என்றும் ஓங்கி ஒலிக்க நியு மன்னார் இணையத்தை வாழ்த்துகின்றேன் - கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன்
மன்னார் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து அவர்களின் நாளாந்த நகர்வுகளையும் யதார்த்தத்தையும் உலகறியச் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட நியு மன்னார் இணையம் தனது பணியை திறம்பட மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பல நூற்றுக்கணக்கான தமிழ் செய்தி இணையத்தளங்கள் பிறப்பெடுத்து அவைகளுள் பல தவளுவதற்கு முன்னரே தமது ஆயுளை முடித்துக்கொண்டு விட்டன. இவ்வாறான சூழ்நிலையில் நான்கு ஆண்டுகளாக நியு மன்னார் இணையம் மக்கள் குரலாக ஒலிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அதேபோன்று தமிழ் முஸ்லிம் கத்தோலிக்கம் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றி பிட்டும் தேங்காய்ப் பூவையும் போல் கலந்துறவாட தொடர்ந்தும் செயற்பட இதயபூர்வமான வாழ்த்துக்களை மன்னார் இணையத்திற்கு தெரிவித்துக் கொள்வதோடு
அரசியல் மையங்களை கடந்து சமுகத்தின் பிணைப்புக்காக மாற்றுக்கருத்துள்ள சிந்தனையை
ஏற்படுத்த நியு மன்னார் இணையம் தொடர்ந்தும் முயற்சிக்கும் என்ற நம்பிக்கையுடனும் பிரார்த்தனைகளுடனும்
இவ்வண்ணம்
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை
கௌரவ அமைச்சர்
றிசாட் பதியுதீன்
மக்கள் குரலாக என்றும் ஓங்கி ஒலிக்க நியு மன்னார் இணையத்தை வாழ்த்துகின்றேன் - கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன்
Reviewed by Admin
on
October 27, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment