போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரில் மோசடி - சுகாதார அமைச்சு
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்களை தெளிவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் முழுவதும் கொழும்பில் இதுதொடர்பில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொடர்பில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக பதிவுசெய்யப்படாத நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதனால் சுகாதாரத்திற்கு பாரியளவிலான கேடு ஏற்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரில் மோசடி - சுகாதார அமைச்சு
Reviewed by Admin
on
October 24, 2013
Rating:
Reviewed by Admin
on
October 24, 2013
Rating:


No comments:
Post a Comment