தையிட்டி எங்கள் சொத்து ;யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை அகற்றுமாறு போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் தையிட்டியில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டமை மற்றும் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தமை முதலிய செயல்களுக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தையிட்டி எங்கள் சொத்து ;யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்
Reviewed by Vijithan
on
December 22, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 22, 2025
Rating:


No comments:
Post a Comment