யாழ்.பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் உணவு விடுப்பு போராட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப்  போராட்டமொன்றினை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
 யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்னால் பதாதைகளைத் தாங்கியவாறு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். 
1.திடீர் வேலை நிறுத்தத்தினால்  நிற்கதியாகியுள்ள எமக்கு உரிய தீர்வினை வழங்குங்கள்.
 2.எமது வேலையினைத் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கு தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள்.
 3.இதுவரை காலமும் பல்கலைக்கழகத்திற்காக விசுவாசமாக உழைத்த எங்களை இடைநிறுத்தி வீதிக்கு அனுப்பியது தான் தங்களின் நிர்வாகத்தினால் எமக்கு வழங்கப்பட்ட வெகுமதியா? 
4.தொழிலாளர்கள் வெற்றிடத்திற்கு புதிய ஆட்சேர்பின் போது கடந்த 10 மாதகாலமாக இங்கு பணி புரிந்து வந்த நாங்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமானதா?
 5.புதிய ஊழியர் ஆட்சேர்பின் போது எமது பெயர்ப்பட்டியலை சம்பந்தப்பட்ட அமைச்சிடம் வழங்காமல் நிர்வாகம் எம்மைப் புறக்கணித்தமை நியாயமா? 
6.பல்கலைக்கழக நிர்வாகமே எமது நிலமைக்கு தீர்வினை வழங்குங்கள். போன்ற கோரிக்கை அடங்கிய பதாதைகளைத் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளாந்த கூலியின் அடிப்படையில் பணியாற்றி வந்த எங்களை, வெற்றிடங்களுக்கான புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பில் சேர்த்துக் கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர்.
 இதனால், தற்போது நாங்கள் வேலையிழந்து நிர்க்கதியாகியுள்ளோம். இந்தநிலையில் எமக்கு நியாயமான தீர்வை பல்கலைக்கழக பேரவை, உறுப்பினர் சபை மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியன பெற்றுத்தர வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமக்கான தீர்வு பெற்றுத் தரம்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
யாழ்.பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் உணவு விடுப்பு போராட்டம்  
.jpg) Reviewed by Admin
        on 
        
October 21, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 21, 2013
 
        Rating: 
      .jpg) Reviewed by Admin
        on 
        
October 21, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 21, 2013
 
        Rating: 
.jpg)
 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment