மன்னார் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்
மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள சம்மோசா உணவகம் ஒன்றில் சுகாதாரமற்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த மூர் வீதியில் பள்ளிவாசலுக்கு அண்மித்த பகுதியில் நடத்தப்பட்டு வரும் சம்மோசா உணவகம் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட உணவுகள் அருவருக்கதக்கவாறு காணப்படவதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.
இவ் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள் சுகாதாரமற்ற வகையில் காணப்படுவதாகவும் குறிப்பாக இங்கு விற்பனை செய்யப்படும் சூப் (மாட்டிறைச்சி சூப்) சுகாதாரமற்றமுறையில் அருவருக்கதக்கவாறு காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை குறித்த சமோசா உணவகத்திற்கு சூப் அருந்துவதற்காக சென்ற நபர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட சூப்பில் (மாட்டிறைச்சி சூப்) அருவருக்கதக்க வகையில் மாட்டின் பற்கள் மற்றும் மாட்டின் கழிவுப் பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த நபர் சூப்பினை பரிமாறிய நபரிடம் இது பற்றி வினவிய போது சில வேளைகளில் சூப்பிற்காக வாங்கப்படும் மாட்டின் பாகங்கள் சுத்தம் செய்யப்படாமல் விற்கப்படுவதால் சில வேளைகளில் தவறுதலாக இவ்வாறு நிகழலாம் என தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களுக்கு உணவிற்காக விற்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையிலும் அருவருப்பற்றவகையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
இன்நிலையினை கருத்திற் கொண்டு உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என இம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
லுயிஸ் மாசல்
மன்னார் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்
Reviewed by Admin
on
October 18, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment