தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மன்னாரில் ஆரம்பிப்பு.(படங்கள்)
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று திங்கட்கிழமை மன்;னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபபாளர் என்.பரீட் தெரிவித்தார்.
-சுகாதார அமைச்சினால் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதியான ஒரு வார காலத்தினை தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் குறித்த நிகழ்வு இன்று மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-மன்னார் பிராந்திய சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று காலை விழிர்ப்புனர்வு ஊர்வலம் ஒன்று மன்னார் நகரில் இடம் பெற்றது.
-இன்று காலை 9 மணியளவில் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள பிராநதிய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன் குறித்த விழிர்ப்பனர்வு பேரணி ஆரம்பமானது.
இதன் போது சுகாதார பணியாளர்கள்,மாணவர்கள்,பொலிஸார்,டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு பிரிவினர்,இலங்கை செஞ்சிலுவைச்சங்க பணியாளர்கள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது குறித்த பேரணி வைத்திய சாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதிக்கச் சென்று அங்கிருந்து மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய குறித்த விழிர்ப்பனர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மீண்டம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையினை சென்றடைந்தது.
-இதன் போது மன்னார் நகர சபை தலைவர்,மன்னார் பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் எஸ்.என்.எம்.சஜானி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் நிருபர்
7-10-2013)
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மன்னாரில் ஆரம்பிப்பு.(படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
October 07, 2013
Rating:
No comments:
Post a Comment