அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத குழுவினை நினைவுகூர அனுமதியோம்: ஹத்துருசிங்க

தமிழீழ விடுதலை புலிகளின் மயானத்தை புனரமைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி அமைப்பு ஒன்று கோரியுள்ள நிலையில்இ என்ன நடந்தாலும் பயங்கரவாத குழுவினை நினைவுகூர அனுமதிக்கப் போவதில்லையென யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறியுள்ளார்.

அமெரிக்காவில்கூட தமிழீழ விடுதலை புலிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுகூர அல்லது அதன் மயானங்களை புனரமைக்க இராணுவம் அனுமதிக்காதென ஹத்துருசிங்க கூறினார்.

அல்-குவைடா தலைவர் பின் லாடன் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தபின் அவரது உடலுக்கு என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது  இவ்வாறு தான் அமெரிக்கா பயங்கரவாத தலைவர் விடயத்தை கையாண்டது.

இறந்து போன தமிழீழ விடுதலை புலிகளினை நினைவுகூர எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்  இவ்வாறான முயற்சிகள் உரிய முறையில் கையாளப்படும் என்றும் அவர் கூறினார்.

யுத்தகாலத்தில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை புலி போராளிகளின் மயானங்களை புனரமைக்கும்படி கேட்கும் தீர்மானத்தை சாவகச்சேரி பிரதேசசபை அன்மையில் நிறைவேற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பயங்கரவாத குழுவினை நினைவுகூர அனுமதியோம்: ஹத்துருசிங்க Reviewed by Author on October 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.