தமிழ் தேசிய கூட்டமைப்பு – பா.ஜ.க பேச்சு
பிரதானமாக தான் மருத்துவ காரணங்களினால் கடந்தவாரம் தமிழ் நாட்டுக்கு சென்ற போதிலும்இ பா.ஜ.கட்சியின் தமிழ் நாட்டு தலைவர்களுடன் பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
பா.ஜ.க வின் தமிழ் நாட்டு கிளையின் தலைவர் என்.ராதாகிருஷ்ணா மற்றும் முன்னாள்; தலைவர் எல்.கணேசன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் என பலரை இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.
அதே சமயம் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனதிராசா, எம்.எ.சுமந்திரன் ஆகியோர் அமெரிக்காவிலுள்ள தமிழ் நிறுவனங்களின் அழைப்பையேற்று செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்கா சென்றனர்.
இவர்கள் அமெரிக்கா இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திப்பார்களா என கேட்டபோது 'எனக்கு தெரியாது' என இரா.சம்பந்தன் கூறினார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு – பா.ஜ.க பேச்சு
Reviewed by Author
on
October 31, 2013
Rating:

No comments:
Post a Comment