யாழ் பல்கலைக்கழக நடன துறை மாணவர்களது போராட்டம் தொடருகின்றது.[படங்கள் இணைப்பு ]
யாழ்ப்பாணம் பல் கலைக்கழக நடனத்துறை மாணவ மாணவிகள் ஆறாவது நாளாகவும்
வகுப்புக்களை பகிஸ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள் .
பரீட்சையில் குறிப்பிட்ட மாணவிகள் சித்தியடையாமையால் தாங்கள் பழி வாங்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்தப் போராட்டதை மாணவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் .
இது சம்பந்தமாக சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர் கருத்துக் கூறுகையில் மாணவ மாணவிகள் உரிய காலத்தில் கற்க வேண்டியதை கற்காது பரீட்சையில் சித்தியடையாத விடத்து விரிவுரையாளர்கள் மீது குற்றம் கூறி தமது தவறுகளை மறைத்து வகுப்புக்களை பகிஸ்கரிக்கும் சம்பவம் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வெனத் தெரிவித்துள்ளார் .
பல் கலைக்கழக மாணவ மாணவிகளும் கூட தமக்கு பரீட்சையில் நியாயம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப்போராட்டத்தை நடத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும் .
யாழ் பல்கலைக்கழக நடன துறை மாணவர்களது போராட்டம் தொடருகின்றது.[படங்கள் இணைப்பு ]
Reviewed by Author
on
October 31, 2013
Rating:
No comments:
Post a Comment