அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. ராஜபக்ஷ.

இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்த நிலையில் அந்நாட்டின் வடக்குமாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும்  சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர் .

வடக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விக்னேஸ்வரனும் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறிவருகிறார் .

நாட்டின் பாதுகாப்பு கருதியே வடக்கு மாகாணத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்று ராஜபக்சே தொடர்ந்து கூறி வந்தார் .

இந்நிலையில்  தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இராணுவ வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய ராஜபக்ச  '4 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை இராணுவம் வெற்றி கொண்ட பிறகில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எனது அரசு போதிய நிவாரணத்தை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியது .

அதைத்தொடர்ந்து  வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற வற்புறுத்தலும் எழும்பியது .

இது நடைமுறைக்கு சாத்தியமற்றது . இதை செய்யவும் முடியாது என்று கூறினார் .

வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. ராஜபக்ஷ. Reviewed by Author on October 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.