அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: தமிழக தலைவர்களிடம் மன்னார் ஆயர் வேண்டுகோள்

இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறுவதை தடுக்குமாறு மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசியல் எதுவும் இல்லை. இலங்கையின் கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையில் வரும் தமிழக மீனவர்கள் தமது தொழில்களை மேற்கொள்கின்றனர்.

இதன் காரணமாக இலங்கையில் குறிப்பாக வடக்கு மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் தமிழக மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் இலங்கை மீனவர்கள் தம்மாலான நடவடிக்கைகள் யாவற்றையும் எடுத்தனர். எனினும் எதுவும் பயன்தரவில்லை.

எனவே இது தொடர்பில் தமிழக முதல்வரும், கருணாநிதியும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று மன்னார் ஆயர் கோரியுள்ளார்.
தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: தமிழக தலைவர்களிடம் மன்னார் ஆயர் வேண்டுகோள் Reviewed by NEWMANNAR on October 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.