வடக்கு கிழக்கு மகாண உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்டப்போட்டியில் வெற்றி பெற்ற மன்னார் சென் . லூசியா அணி
கடந்த 22,23,24 ஆகிய திகதிகளில் திரு . மருசலீன் அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தாருடன் இணைந்து சென் . ஜோசப் விளையாட்டுக்கழகத்தினால் லீக்கின் ஆதரவுடன் நடைபெற்ற வடக்கு கிழக்கு மகாண உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி நடைபெற்றது .
இதில் பருத்தித்துறை , யாழ்ப்பாணம் , வவுனியா , மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை , முல்லைத்தீவு , கிளிநொச்சி ஆகிய லீக்குகளில் இருந்து சிறந்த 02 அணிகள் வீதம் 16 அணிகளும் மன்னார் லீக்கிலிருந்து சிறந்த 16 அணிகளுமாக மொத்தமாக 32 அணிகள் இப்போட்டியில் பங்குபற்றின. இதில் சென் . லூசியா அணியும் பங்குபற்றியது .
இம் மூன்று நாள் போட்டியில்சென் . லூசியா அணி முதல் போட்டியில் வவுனியா unifield வி.க Walk over முறையில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தெரிவானது. இரண்டாவது சுற்றில் மட்டக்களப்பு அணியுடன் நடைபெற்ற போட்டியில் முதல் பகுதியில் 3 கோள்களை அடித்திருந்த நிலையில் எதிர் அணி இப்போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது .
இப்போட்டியில் சென் . லூசியாஅணிக்காக திரு . பிராங்க்ளின் 2 கோள்களையும் திரு . பிங்கோ 1 கோள்களையும் பெற்றுத்தந்தனர் . காலிறுதிப் போட்டியானது யாழ்ப்பாணம் ரோயல் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 1 :0 கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதிப்போட்டிக்கு தெரிவானது . இப்போட்டியில் சென் . லூசியா அணிக்காக திரு . யூலி 1 கோலை பெற்றுத்தந்தார் .
அடுத்து அரை இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஞானமுருகன் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 2 :0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தெரிவானது . இப்போட்டியில் திரு . யூலி 1 கோலையும் திரு . பிராங்க்ளின் 1 கோலையும் எமது சென் . லூசியா அணிக்காக பெற்றுத்தந்தனர் .
இறுதிப்போட்டி சென் . லூசியா வி . க - பள்ளிமுனை எதிர் சென் . ஜோசப் வி . க பனங்கட்டுக்கொட்டு ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது . இதில் சென் . லூசியா அணி பெனால்டி முறையில் வெற்றிபெற்று வெற்றிகிண்ணத்தையும் ,சுற்றுக்கேடயத்தையும் , ரூபா . 5௦௦௦௦ பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது .
மேலும் சில சிறப்பு பரிசில்களை சென் . லூசியா கழக வீரர்கள் பெற்றுக்கொண்டனர் .
சிறந்த கோல் காப்பாளர் - திரு . ரொக்சன் றோச்
சிறந்த முன் கள வீரர் - திரு . யூலி பிகிறாடோ
சிறந்த நடு கள வீரர் - திரு . எடிசன் பிகிறாடோ
சிறந்த வீரர் - திரு . ரொனால்ட் றோச்
வடக்கு கிழக்கு மகாண உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்டப்போட்டியில் வெற்றி பெற்ற மன்னார் சென் . லூசியா அணி
Reviewed by NEWMANNAR
on
November 25, 2013
Rating:
No comments:
Post a Comment