இலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை. இராஜாங்க அமைச்சர் ஸ்வேயாருடன் கூட்டமைப்பு பேச்சு.
இலங்கைக்கான தனது விஜயம் தொடர் பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று
திங்கட்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார் . இந்தத் தகவலை பிரித்தானியாவின் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வேயார் தெரிவித்துள்ளார் . தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் , ஆகியோர் நேற்று இராஜாங்க அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர் . இந்தச் சந்திப்பின்போதே ஸ்வேயார் இதனை தெரிவித்துள்ளார் .
இச்சந்திப்பில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது .
அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான வழிவகைகள் தொடர்பிலும் , இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது .
மனித உரிமை விவகாரம் , யுத்தக்குற்றச்சாட்டுக்கள் , ஊடக சுதந்திரம் , என்பவை தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தும் . நல்லிணக்கம் ஏற்பட்டு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் .
அதற்காக தொடர்ந்தும் பிரித்தானியா பாடுபடும் என்று இராஜாங்க அமைச்சர் ஸ்வேயார் தெரிவித்துள்ளார் .
நேற்று பிற்பகல் 12.30 மணிமுதல் 1.30 மணிவரை இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது . பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நேற்று அதிகாலை நாடுதிரும்பியுள்ளார் .
இன்றைய தினம் அவர் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
இதேவேளை கூட்டமைப்பின் தலைவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதியையும் சந்தித்து நேற்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . இந்தச் சந்திப்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் எடுத்துக்கூறியுள்ளார் .
இலங்கை விஜயம் தொடர்பில் கமரூன் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை. இராஜாங்க அமைச்சர் ஸ்வேயாருடன் கூட்டமைப்பு பேச்சு.
Reviewed by NEWMANNAR
on
November 18, 2013
Rating:

No comments:
Post a Comment