மன்னாரில் தெரிவு செய்த வரிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிய ராணுவம்.
இராணுவத்தின் 54 ஆவது காலாட்படை பிரிவு ஏற்பாடு செய்த வசதி குறைந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை (22) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் சாந்திபுரம் ஆரம்ப பாடசாலை ,மன்னார் அலாவுதீன் பாடசாலை மற்றும் மன்னார் நகர சபை சுற்றி கரிப்பு பாணியாளர்களின் மாணவர்கள் உள்ளடங்களாக 150 மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக இராணுவத்தின் 54 ஆவது காலாட்படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திர அபயகோன்,இராணுவத்தின் 543 வது காலட் படைப்பிரிவின் தளபதி மூத்த அதிகாரி றமித்து ஹசந்த,சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்ற வைத்திய கலாநிதி ஜினஞ்சலாசாணிக்கா விஜே குணசேகர மற்றும் அவரது மகள் வைத்திய கலாநிதி தெருசி தில்ஹாரா பெரேரா,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, பாடசாலைகளுக்கான அன்பளிப்புக்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
December 23, 2025
Rating:


No comments:
Post a Comment