திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தில் சிறுவர் தின, முதியோர் தின வைபவமும் ஆசிரியர் கௌரவிப்பும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அண்மையில் மன்னார், திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தில் சிறுவர் தின, முதியோர் தின வைபவமும் ஆசிரியர் கௌரவிப்பும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைவங்கி அலுவலர் திரு.திலீபன், திருமதி.கார்த்திகா திலீபன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
திருக்கேதீச்சரம் கிராம முன்னேற்றச் சங்கத்தினர்,பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். கடந்த க.பொ.த.(சாதாரணதரப்) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் ஏனைய கல்விச் சாதனையாளர்களும் ஒழுக்கம், தலைமைத்துவப்பண்பு, ஒழுங்கமைப்பு ஆற்றல், முன்மாதிரியான மாணவர், முன்னேறிவரும் மாணவர், சிறந்த நினைவாற்றல் உள்ள மாணவர் என பல்வேறு பண்புகளையும் பரிமாணங்களையும் வெளிப்படுத்திய மாணவர்களும், 2012 – 2013 க்கான சிறந்த மாணவன், சிறந்த மாணவியாகத் தெரிவு செய்யப்பட்டவர்களும் விருதுகள் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்
கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து சிறந்த மாணவனாக செல்வன் கு.பவளசிங்கமும் சிறந்த மாணவியாக செல்வி செ.செல்வகுமாரியும் விருது பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதன்போது எடுக்கப்பட்ட சில படங்கள்
திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தில் சிறுவர் தின, முதியோர் தின வைபவமும் ஆசிரியர் கௌரவிப்பும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
Reviewed by NEWMANNAR
on
November 10, 2013
Rating:
No comments:
Post a Comment