மன்னார் விம்பம் பகுதியில் இன்று மன்னார் பொது நூலகம் பற்றிய அரிய தகவல்களும் படங்களும்
மன்னார் மாவட்டத்தின் பிரதான பொது நூலகம் பல சிறப்புகளோடு இயங்கிவருகின்றது ஆரம்ப காலத்தில் இவ் நூலகம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்திருக்கும் கட்டிடத்திலேயே இயங்கி வந்தது.
எனினும் அக் காலப்பகுதியில் நூலகத்திற்கு தேவையான வசதிகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை இதனால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஏனையோர் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந் நிலையில் நூலக விரிவாக்கம் கருதி நூலகத்தை எஸ்பிளனட் வீதியில் அமைந்துள்ள தொழிநுட்ப பூங்காவிற்கு 2004ம் ஆண்டு மாற்றப்பட்ட பின் தற்பொழுது சிறந்த நூலகமாக மன்னார் மாவட்டத்தில் திகழ்கின்றது.
எனினும் படிப்படியாக தொழிநுட்ப ரீதியாக இவ் நூலகம் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றது
1964ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த நூலகம் பிரதேச சபையாக இருந்த காலப்பகுதியில் மந்தகதியில் இருந்தாலும் நூலகம் படிப்படியாக வழர்ச்சி அடைந்து நகர சபையாக தரமுயர்த்தப்பட்ட பின் மன்னார் மாவட்டத்தின் பிரதான நூலகமாக மாறியுள்ளது
இன் நூலகத்தில் பல பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் கீழ் தளத்தில் முகாமையாளர் அலுவலகம் ,சிறுவர் பகுதி,தொழிநுட்ப பகுதி , விசாலமான வாசிப்பு பகுதி, ஆவணபாதுகாப்பு பகுதி அதேபோன்று கட்டிடத்தின் மேல்பகுதியில் புத்தக இரவல் வழங்கும் பகுதி, பிரதான உசாத்துணை பகுதி, வாசிப்பு பகுதி , வாசகர்களுக்கான படிப்பு பகுதி ஆகியன உள்ளது
இதேவேளை மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கென விசேட வாசிப்பு பகுதியும் அமைக்கப்பட்டள்ளது
எனினும் இட பற்றாக்குறையை அடுத்து தற்போதுள்ள நூலகவளாகத்தில் மேலும் ஒரு கட்டிடத் தொகுதி ஒன்று எதிர்காலத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
இந் நூலகத்தின் துணைநூலகமாக பள்ளிமுனை நூலகம் இயங்கிவருகின்றது.
மன்னார் பிரதான பொது நூலகத்தில் சுமார் 15600 நூல்கள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப காணப்படுகின்றது அத்தோடு மூன்று மொழிகளிலும் கூடிய 16 பத்திரிகைகள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் மக்களிக் வாசிப்புக்கென வைக்கப்பட்டுள்ளது. மற்றும் 22 வகையான மாதாந்த சஞ்சிகைகள் இங்கு மக்களின் பாவனைக்கென வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்பொழுது புதிதாக அறிமுகப்படுத்திவரும் நூலக இணையத்தள வசதி மன்னார் நூலகத்திற்கு வழங்கப்படவில்லை இது தொடர்பாக நூலக வளர்ச்சியில் அக்கறையுள்ளவர்கள் மன்னார் மவாட்டத்திற்கு குறித்த நூலக இணையத்தள வசதியினை பெற்று கொடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மன்னார் பிரதான நூலகத்திற்கு 2008ம் ஆண்டு முதல் நூலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என தெரிய வருகின்றது. 2008ம் ஆண்டு முதல் உள்ள புத்தகங்களே தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதனை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய புத்தகங்கள் தருவிக்கப்படவேண்டிய தேவைப்பாடு இங்கு காணப்படுகின்றது.
எனவே இதனையும் கருத்திற் கொண்டு நூலக வளர்ச்சியை மேம்படுத்தி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேலும் உயர்ந்திட நூலக வளர்ச்சியில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும்.
மன்னார் விம்பம் பகுதியில் இன்று மன்னார் பொது நூலகம் பற்றிய அரிய தகவல்களும் படங்களும்
Reviewed by Author
on
November 10, 2013
Rating:
No comments:
Post a Comment