அண்மைய செய்திகள்

recent
-

300 க்கும் மேற்பட்ட சாரணர்களுடன் வவுனியாவில் இடம்பெறவுள்ள மாவட்ட சாரண ஒன்றுகூடல்

வவுனியா மாவட்ட சாரணர் சங்கம் நடாத்தும் சாரண மாணவர்களுக்கான 11 வதுமாவட்ட ஒன்றுகூடல் எதிர்வரும் 15/11/2013 காலை 9.00 மணி தொடக்கம் 17/11/2013 மாலை 4.00 மணி வரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடை பெற உள்ளதாக சாரண மாவட்ட ஆணையாளர் திரு எம்.எஸ்.பத்மநாதன் தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில், பதினைந்திற்கு மேற்பட்ட பாடசாலைகளின் 300 க்கு மேற்பட்ட சாரணர்களுடன் இவ் வருடத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெறும். அத்துடன் பலதரப்பட்ட நிகழ்வுகளும் ஒழுங்கமைத்து நடாத்த ஏற்பாடாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு 15/11/2013 அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும்.

 இதில் சாரண மாணவர்களுக்கான கைத்திறன் போட்டிகள், சாரண பொது அறிவு போட்டி, சாரணர்களுக்கான மரதன், கயிறிழுத்தல் மற்றும் பல நிகழ்வுகளுடன் எமது மாவட்ட பாடசாலை சாரணர்களுக்கிடையில் போட்டிகள் நடைபெறும் எனவும். 17/11/2013 அன்று காலை 10.00 மணிக்கு பெண் சாரணியர் மற்றும் குருளைச்சாரணர்களுக்கான நிகழ்வுகள் நடைபெறும். இதன் இறுதி நிகழ்வுகள் 17/11/2013 அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
300 க்கும் மேற்பட்ட சாரணர்களுடன் வவுனியாவில் இடம்பெறவுள்ள மாவட்ட சாரண ஒன்றுகூடல் Reviewed by NEWMANNAR on November 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.