மல்வில், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு மின்விநியோகம்
கிளிநொச்சி மாவட்டத்தின் இயக்கச்சி - மல்வில், மற்றும் ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு நேற்று திங்கட்கிழமை மின்விநியோகிக்கப்பட்டுள்ளது.
மல்வில் பகுதிக்கு 136 மில்லியன் ரூபா செலவிலும் ஸ்கந்தபுரம் பகுதிக்கு 175 மில்லியன் ரூபா செலவிலும் மின்விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் சத்தியசீலன், கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், வடக்கின் வசந்தம் மின்விநியோகத் திட்ட முகாமையாளர் குணசீலன், வடக்கின் வசந்தம் மின் இணைப்பு பொறியியலாளர் அமில டயஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மல்வில், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு மின்விநியோகம்
Reviewed by NEWMANNAR
on
November 12, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 12, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment